சுப காரியங்கள் செய்யும் போது ராகுகாலத்தில் செய்யக்கூடாது என பலரும் கருதுவது உண்டு ஆனால் அது விஷேச பூஜைகளுக்கு மட்டுமே பொருந்தும். ராகு காலத்தில் மற்ற கிரகங்களின் பலம் குறைந்து இருக்கும். இதனால் தான் எந்த சுப நிகழ்ச்சிகளையும் ராகுகாலத்தில் செய்யாமல் தவிர்க்கின்றனர். ஆனால் தேவி பாகவதம் துர்கா தேவியை ராகு காலத்தில் பூஜிப்பது அதிக பலனை கொடுக்கும் என கூறுகிறது. நமக்கு வேண்டிய நல்லவற்றை அள்ளிக்கொடுப்பதில் அவரைப் போன்று யாரும் கிடையாது.
நமது ராசியில் ராகுவின் நிலைப்பாடு பொருத்துதான் அந்த நன்மைகளும் அமையும். ஒரு நாளில் 24 மணி நேரம் இருக்கிறது என்றால் அதில் ஒன்றரை மணி நேரம் கேதுவும் ஒன்றரை மணி நேரம் ராகுவும் துர்க்கா தேவியை பூஜிப்பது வழக்கம். அந்த நேரம்தான் ராகு காலம் என்றும் எம கண்டம் என்றும் கூறப்படுகிறது. ராகு காலத்தில் செய்யப்படும் துர்க்கை பூஜை சிறப்பு மிக்கதாக கருதப்படுகின்றது. குறிப்பாக வெள்ளிக்கிழமைகளில் வரும் ராகு காலத்தில் துர்க்கை தேவியை பூஜிப்பதால் பல நன்மைகள் கிடைக்கும்.
அவை,
- மகப்பேறு கிடைக்கும்.
- மனைவியின் ஆயுள் பலம் அதிகரிக்கும்.
- குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும்.
- வாரிசுகளின் வாழ்வில் இருக்கும் அனைத்து தடைகளும் நீங்கும்.
- வீட்டில் பொன் பொருள் வந்தடையும்.
- சேமிப்பு அதிகரிக்கும்.