மதுரையில் வெள்ளிப்பதக்கம் பெற்ற பள்ளி மாணவியை அனைவரும் பாராட்டியுள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் பள்ளி மாணவி ஹரிணி என்பவர் வசித்து வருகிறார். இவர் மதுரையிலிருக்கும் கே.எம்.ஆர் பள்ளியில் 10 ஆம் வகுப்பில் பயின்று வருகிறார். இதற்கிடையே சண்டிகரில் தேசிய அளவிலான ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. இதில் ஹரிணி கலந்து கொண்டார். மேலும் அதில் வெற்றிபெற்று வெள்ளிப்பதக்கமும் வாங்கி சாதனையும் படைத்துள்ளார்.
இதனால் மாணவியை மதுரை மாவட்டத்தின் முதன்மை கல்வியின் அலுவலரான சுவாமிநாதன் பாராட்டியுள்ளார். இதனையடுத்து கே.எம்.ஆர் பள்ளியின் தாளாளரான கிருஷ்ணவேணியும், பள்ளியின் முதல்வரான சரஸ்வதி வாஸ்வும் மற்றும் பலரும் பாராட்டியுள்ளனர்.