Categories
மாநில செய்திகள்

வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்களே உஷார்!…. காரை வழிமறித்து கம்பீரமாக நின்ற காட்டு யானைகள்…. வைரல்….!!!

தற்போது கோடைகாலம் என்பதால் வனப்பகுதியில் உள்ள காட்டு விலங்குகள் எல்லையையொட்டி உள்ள பகுதிகளுக்கு வருகிறது. அதிலும் இரவு நேரங்களில் எல்லைகளை கடந்து மற்றொரு பகுதிகளுக்கு செல்லும் காட்டு யானைகள் தற்போது பகல் நேரங்களிலும் உலா வருகிறது. இதனால் கோவை வெள்ளியங்கிரி மலை உள்ளிட்ட பகுதிகளுக்கும் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால் பல்வேறு கட்டுப்பாடுகள் போடப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று மாலை கோவை பூண்டி சாலையில் வெள்ளிங்கிரி மலைக்கு செல்ல பக்தர்கள் காரில் சென்றுள்ளனர்.

அப்போது முதலில் காட்டு யானைகள் சத்தம் கேட்டதால் உடனடியாக காரை ஓட்டி வந்தவர் வாகனத்தை நிறுத்தி உள்ளார்.  திடீரென சாலையில் 2 யானைகள் வந்து நின்றது. அந்த யானைகள் நீண்ட நேரமாக அதே பகுதியில் நின்ற பிறகு, அங்கிருந்து அருகில் உள்ள வனப்பகுதிக்குள் நுழைந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த பூளுவாம்பட்டி வனத்துறையினர் யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர். மேலும் யானை ஊருக்குள் வராமல் இருக்க பட்டாசுகளை வெடித்து வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். பூண்டி சாலையில் காட்டு யானைகள் கம்பீரமாக நிற்கும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |