Categories
மாநில செய்திகள்

வெள்ளி கிழமை மாலை முதல் திங்கட்கிழமை காலை வரை… முழு ஊரடங்கிற்கு வாய்ப்பு…!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றைக் கட்டுக்குள் கொண்டுவர தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதை தொடர்ந்து வரும் வாரங்களில் கொரோனா கோரத்தாண்டவம் ஆடும் என்று சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. இதன் காரணமாக தமிழக அரசு மேலும் புதிய கட்டுப்பாடுகளை அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதிய கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவிப்பை இன்று மாலை தமிழக அரசு வெளியிடும் என்று தகவல் வெளியாகியிருக்கிறது. தற்போது ஞாயிறு முழுஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்புள்ளதாகவும், இரவு ஊரடங்கின் நேரத்தை அதிகரிக்கவும், அலுவலகத்தில் பணியாற்றுவோரின் எண்ணிக்கையை குறைக்கவும், தமிழகத்தில் வழிபாட்டு தலங்களில் கூட்டத்தை குறைக்கவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வாய்ப்பிருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. அதேபோல், மால்கள், பெரிய கடைகள், தியேட்டர்கள் மூட உத்தரவிடப்படலாம் எனவும் கூறப்படுகிறது. மேலும் தமிழகத்தில் முழு ஊரடங்கை வெள்ளி மாலை முதல் திங்கள் காலை வரை நீட்டிப்பது குறித்து பரிசீலிப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Categories

Tech |