திருவிழாக்கள், அரசியல், சமூகம் சார்ந்த, மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தற்போது உள்ள தடை அக்டோபர் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேய்யா தெரிவித்துள்ளார்.
31.10.2021 வரை அனைத்து வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோயில்களில் கூட்ட நெரிசலை தடுத்திடும் வகையில் அனைத்து கோயில்களிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை, வழக்கமான பூஜைகள் மட்டும் நடைபெறும் எனவும் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா குறைந்து வரும் தருணத்தில் மேலும் முழுமையாக அதனை குறைத்திடும் வகையில் அரசாங்கம் மாநிலம் முழுவதும் நடவடிக்கை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.