Categories
மாநில செய்திகள்

வெள்ளி பதக்கம் வென்ற பவினா பட்டேலுக்கு… தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து…!!!

டோக்கியோ பாராலிம்பிக்கில் டேபிள் டென்னிஸ் இறுதிப் போட்டியில் இந்தியாவின் பவினா பென் படேல் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். 4 பிரிவு கொண்ட இறுதி போட்டியில் சீன வீராங்கனையிடம் தோல்வியடைந்தார் பவினா பென். இறுதிப் போட்டியில் சீன வீராங்கனை ஜோவ் யிங்கிடம் 3-0 என்ற செட் கணக்கில் போராடி தோல்வியை தழுவினார். இதையடுத்து பவினா பென் படேல்க்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது. டோக்கியோ பாராலிம்பிக்ஸில் இந்தியாவுக்கு இதுவே முதல் பதக்கம் ஆகும்.

இந்நிலையில் டோக்கியோ பாராலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற பவினா பென் படேலுக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் அந்த வகையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது: “டேபிள் டென்னிஸ் போட்டியில் சிறப்பாக விளையாடி வெள்ளிப் பதக்கம் வென்றிருப்பது மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உள்ளது உங்கள் வெற்றியை தொடர வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார்

Categories

Tech |