வாழைப்பூவில் மறைந்துள்ள மருத்துவ குணங்கள் பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்:
வெள்ளைப்படுதலால் பெண்கள் அதிக மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடுகிறார்கள். அப்படி இருக்கும் பட்சத்தில் வாழைப்பூவை ரசம் செய்து அருந்தி வந்தால் வெள்ளைப்படுதலை எளிதில் கட்டுப்படுத்தலாம்.
வாழைப்பூ சாற்றுடன் கடுக்காய் பொடியை சேர்த்து குடித்தால் மூலநோய் குணமாகும். வாரம் இருமுறை வாழைப்பூவை உணவில் சேர்த்து கொண்டால் இரத்த மூலம் குணமாகும்.
உடல் சூடு உள்ளவர்கள் வாழைப்பூவுடன் பாசிப்பருப்பு சேர்த்து கடைந்து நெய் சேர்த்து வாரம் இருமுறை உண்டுவந்தால் உடல் சூடு குறைந்து நல்ல பலன் கிடைக்கும்.
வாழைப்பூவை தினசரி உணவில் உட்கொண்டு வருவதினால் ரத்தம் சுத்திகரிக்கப்பட்டு, ரத்தத்தில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகள் கரைக்கப்பட்டு எளிதில் வெளியேற்றி விடும்.