Categories
உலக செய்திகள்

வெள்ளைமாளிகையில் இருந்து கட்டாயமாக வெளியேற்றுவோம்… ட்ரம்ப் மறுத்தால் இதுதான் நடக்கும்… அமெரிக்க சபாநாயகர்…!!

வெள்ளைமாளிகையிலிருந்து வெளியேற டொனால்டு டிரம்ப் மறுத்தாலும்  கட்டாயமாக வெளியேற்றப்படுவார் என அமெரிக்க சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

பாக்ஸ் நியூஸ் பேட்டி நடந்த போது ட்ரம்ப் அமெரிக்க தேர்தல் முடிவுகளை நான் ஏற்றுக்கொள்வேன் என்று உறுதி கூற மறுத்துள்ளார். இதனை அடுத்து அமெரிக்க தலைவர்கள் அனைவரும் அதிபர் டிரம்பிற்கு கண்டனம் தெரிவித்து வந்தனர். இது பற்றி அமெரிக்க  சபாநாயகர் நான்சி பெலோசி கூறுகையில், “தேர்தலில் ஜனாதிபதி ட்ரம்ப் தோற்றுவிட்டால் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவது பற்றி சிறிதும் கவலை கொள்ளவில்லை. அவர் அவ்வாறு வெளியேற மறுத்துவிட்டால் கட்டாயபடுத்தி வெளியேற்றப்படுவார். உண்மை என்ன என்று அவர் அறிந்தாலும் அறியாவில்லை என்றாலும், நிச்சயமாக வெளியேற்றப்படுவர்.

அவர் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேற விருப்பம் தெரிவிக்காததால் , அமெரிக்காவில் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி பதவியேற்றதற்கு  உண்டான தொடக்க விழா நடைபெறாது என்பது அர்த்தமல்ல என கூறியுள்ளார். டிரம்பின் கருத்துக்களுக்கு பதில் கூறும் விதமாக ஜோ பிடன் பிரச்சாரத்தில் இந்தத் தேர்தலை அமெரிக்க மக்கள் முடிவு செய்வார்கள். வெள்ளை மாளிகை கொள்கைகளை மீறுபவர்களை வெளியேற்றுவதற்கு அடுத்த அமெரிக்க அரசு முற்றிலும் திறமையானது எனவும் அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |