தமிழ் சினிமாவில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான ஜோக்கர் என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை ரம்யா பாண்டியன். அதன்பின் கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான ஆண் தேவதை என்ற திரைப்படத்திலும் ரம்யா பாண்டியன் நடித்திருப்பார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.
அதன்பின் பிக்பாஸ் 4-வது சீசனிலும் கலந்து கொண்டார். இந்நிலையில் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ரம்யா பாண்டியன் தற்போது தன்னுடைய லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.