‘நிழல்’ திரைப்படத்தில் நடிக்கும் நடிகை நயன்தாராவின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது .
தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகை நயன்தாரா கடந்த ஆண்டு நிவின் பாலினுக்கு ஜோடியாக ‘லவ் ஆக்சன் ட்ராமா’ என்ற மலையாளத் திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதையடுத்து தற்போது இயக்குனர் அப்பு என்.பட்டாத்திரி இயக்கும் ‘நிழல்’ என்ற மலையாள திரைப்படத்தில் நடிக்கிறார் . இந்த படத்தில் குஞ்சாக்கோ போபன் கதாநாயகனாக நடிக்கிறார்.
#Nizhal clicks 📸 pic.twitter.com/2Nt2igWRmq
— Nayanthara✨ (@NayantharaU) December 4, 2020
சமீபத்தில் நயன்தாரா பிறந்தநாளை ‘நிழல்’ படக்குழுவினருடன் கொண்டாடிய புகைப்படங்கள் வெளியானது. இதையடுத்து குஞ்சாக்கோ போபன் வீட்டிற்கு நயன்தாரா விசிட் செய்த புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வைரலானது . இந்நிலையில் வெள்ளை நிற ஷர்ட் நீல நிறச ஸ்கர்டில் இருக்கும் நயன்தாராவின் அழகிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது .