Categories
மாவட்ட செய்திகள்

வெள்ள நீரில் மூழ்கிய கார்… விரைந்து செயல்பட்ட தீயணைப்பு படையினர்….மீட்கப்பட்ட 12 பேர்…!!

நித்திரவிளை அருகே 12 பேருடன் சென்ற கார் சாலையில் தேங்கி இருந்த மழை வெள்ளத்தில் மூழ்கியது.

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த சுகுமார் என்பவரின் மகன் சுஜின். இவர் வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்வதற்காக நேற்று முன்தினம் திருவனந்தபுரம் ஏர்போர்ட்டுக்கு சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து இவருடைய குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஏர்போர்ட்டிற்கு சென்று சுஜினை வழியனுப்பி விட்டு வந்துள்ளனர்.
திரும்பி வரும் வழியில் நித்திரவிளை அருகே உள்ள நடுவரம்பன்கரை பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் வெள்ளநீர் சூழ்ந்து காணப்பட்டுள்ளது.

இதனை அறியாத வாகன ஓட்டுனர் குறைவாகத்தான் நீர் இருக்கும் என நினைத்து வாகனத்தை இயக்க முற்பட்டுள்ளார். ஆனால் கார் திடீரென பழுதாகி சாலையில் உள்ள நீரில் மூழ்கியுள்ளது. இதனால் காரில் இருந்த 12 பேரும் காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என கூச்சலிட்டுள்ளனர். இதனை கண்ட அருகில் இருந்த மக்கள் உடனடியாக தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சந்திரன் தலைமையிலான தீயணைப்பு குழு வெள்ளத்தில் மூழ்கிய 12 பேரையும் பத்திரமாக மீட்டது.

Categories

Tech |