திருவண்ணாமலையில் வெவ்வேறு இடங்களில் இரண்டு பேருக்கு அரிவாள் வெட்டு.
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கிளியாபட்டு கிராமத்தை சேர்ந்தவர் பச்சையப்பன். அவலூர்பேட்டை ரோடு பகுதியைச் சேர்ந்தவர் அஜித். இவர்கள் இருவர் மீதும் வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் இருக்கின்றது. இவர்கள் இருவரும் கூட்டாளிகள் என சொல்லப்படுகின்றது. இந்நிலையில் பச்சையப்பன் நேற்று இரவு எட்டு மணி அளவில் அவலூர்பேட்டை சாலை ஜங்ஷன் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து அறிவாளால் வெட்ட முயன்றார்கள்.
அவர் தடுத்த பொழுது அவரின் கையில் அறிவாள் வெட்டு விழுந்தது. ஓட ஓட அவரை அந்த மர்ம கும்ப கும்பல் அறிவாளால் வெட்டியுள்ளார்கள். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இது போலவே அஜித் அவலூர்பேட்டை சாலையில் இருக்கும் ரயில்வே கேட் பகுதிக்கு அருகே வரும் பொழுது அதே கும்பலை சேர்ந்த சிலர் அவரை வழிமறித்து அறிவாளால் கொலை செய்ய முயன்றுள்ளார்கள். இதில் இவருக்கு காயம் ஏற்பட்டது.
பின் தகவலறிந்து வந்த போலீசார் பச்சையப்பனை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்கள். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் முன் விரோதம் காரணமாக இச்சம்பவம் நடைபெற்றது தெரிய வந்திருக்கின்றது. மேலும் திருவண்ணாமலையில் மூன்றுக்கும் மேற்பட்ட தரப்பினர் கொள்ளை, திருட்டில் ஈடுபட்டு வருகின்றார்கள். இவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இந்த கொலை முயற்சி சம்பவம் நடந்திருக்கலாம் என போலீசார் கூறியுள்ளனர்.