கேரளாவில் தற்போது ‘வெஸ்ட் நைல்’ காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த 47 வயது நபர் இந்த காய்ச்சல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இந்நிலையில் தமிழ்நாட்டிலும் இந்த வைரஸ் பரவுமோ என பொதுமக்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது.
இந்நிலையில் பொதுமக்கள் வெஸ்ட் நைல் தொற்றால் அச்சப்பட வேண்டாம் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பொதுமக்கள் வெஸ்ட் நைல் தொற்றால் அச்சப்பட வேண்டாம் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “கேரளாவில் வெஸ்ட் நைல் வைரஸ் பாதிப்பினால் ஒருவர் உயிரிழந்துள்ளார். எந்த புதிய வகை வைரசாக இருந்தாலும் கேரளாவை பாதிக்கும் வகையில் உள்ளது. இது போன்ற வைரஸ் பாதிப்புகள் கோவை உள்பட தமிழகத்தில் பரவுவதைத் தடுக்க சுகாதாரத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தீவிர கண்காணிப்பு பணிகள் நடந்து வருகிறது. கேரளாவில் இருந்து கோவைக்கு வரும் 13 சோதனைச்சாவடிகளும் தீவிரமாகக் கண்காணிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.