ரயில் எஞ்சின் குறிப்பிட்ட வேக வரம்பை தாண்டினால் உடனே நிறுத்தும் வசதி இல்லை. அதனால் யானைகள் கடக்கும் பகுதிகளில் இயக்கப்படும் ரயில்களில் வேக கட்டுப்பாட்டு கருவிகள் இன்னும் கொடுக்கவில்லை என்று ஆர்டிஐ மூலம் பாண்டியராஜா என்பவர் எழுப்பிய கேள்விக்கு பாலக்காடு ரயில்வே பதிலளித்துள்ளது. யானைகள் மீது ரயில் மோதியதால் எந்த ஓட்டுநர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் கூறியுள்ளது.
அதனால் ரயில்வே நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி இதனால் ஏற்படும் விலங்குகளின் உயிரிழப்புகளை தடுக்க விரைந்து வேகக் கட்டுப்பாட்டுக் கருவிகள் பொருத்தப்பட வேண்டும் எனவும் கூறியுள்ளது m