வேகத்தடையினர் தவறி விழுந்து ஜோதிடர் உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் மோகனூரை அடுத்துள்ள ஒருவந்தூர் பாவடித்தெருவில் நடராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். ஜோதிடரான இவர் சம்பவத்தன்று மொபட்டில் காட்டுப்புத்தூரில் இருந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது ஒருவந்தூர் அருகே இருந்த வேகத்தடையில் ஏறியபோது திடீரென மொபட் கட்டுபாட்டை இழந்துள்ளது. அப்போது நடராஜன் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் அவரது தலையில் பலத்தகாயம் ஏற்பட்டுள்ளது.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதியினர் உடனடியாக நடராஜை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவரை மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நடராஜ் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து மோகனூர் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.