மோட்டார் சைக்கிள் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பெயிண்டர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்திலுள்ள எருமாடு பகுதியில் பெயிண்டரான முருகானந்தம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வேலைக்கு சென்று விட்டு தனது மோட்டார் சைக்கிளில் மீண்டும் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இந்நிலையில் மாத மங்கலம் பகுதியில் இருக்கும் வேகத்தடையில் ஏறி இறங்கிய போது முருகானந்தத்தின் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த முருகானந்தத்தை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி முருகானந்தம் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.