Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வேகத்தடையில் ஏறி இறங்கிய வாகனம்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. கதறி அழுத குடும்பத்தினர்…!!

வேகத்தடையில் ஏறி இறங்கிய போது மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டத்திலுள்ள கிழவனேரி கிராமத்தில் தொழிலாளியான அன்பழகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுள்ளார். இந்நிலையில் நடுவக்கோட்டை அருகே சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிள் வேகத்தடையில் ஏறி இறங்கியது. அப்போது எதிர்பாராதவிதமாக அன்பழகன் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து படுகாயமடைந்தார்.

இதனை பார்த்த பொதுமக்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி அன்பழகன் பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |