Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

வேகப்பந்தின் தாக்கத்தை….. “டி20 உலகக்கோப்பையில் பார்த்திருப்பீர்கள்”…. உம்ரான் மாலிக் பற்றி ரவி சாஸ்திரி என்ன சொன்னார்?

உண்மையான வேகத்திற்கு மாற்று இல்லை என்று உம்ரான் மாலிக் குறித்து முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

இந்திய அணி தற்போது நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரில் விராட் கோலி, ரோஹித் சர்மா உள்ளிட்ட மூத்த வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்ட நிலையில், ஹர்திக் பாண்டியா அணிக்கு தலைமை தாங்குகிறார். ஹர்திக் தலைமையிலான இந்த அணியில் நிறைய இளம் வீரர்கள் உள்ளனர். அதேபோல நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் 150 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடிய உம்ரான் மாலிக்கும் அணியில் இடம் பிடித்துள்ளார்.

முன்னதாக டி20 உலக கோப்பையில் தொடக்க வீரர்கள் சரியாக ஆடாததும், அதேபோல பந்துவீச்சில் பெரிய அளவில் தாக்கம் இல்லாததும் இந்திய அணி தோல்விக்கு மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான், நியூசிலாந்தில் உம்ரான் மாலிக் மிக முக்கிய கருவியாக இருப்பார் என்று தெரிவித்தார்.

இந்நிலையில் டி20 உலகக் கோப்பை அணியில் உம்ரான் மாலிக்கை சேர்க்காமல் இந்தியா எப்படி வெளியேறியது  என்பதை முன்னாள் இந்திய தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி நினைவுபடுத்தினார். உண்மையான வேகத்திற்கு மாற்று இல்லை என்று சாஸ்திரி நம்புகிறார், இதனால் இந்திய அணியின் தேர்வு செயல்முறை குறித்து கேள்வி எழுப்பினார்.

இதுகுறித்து ரவி சாஸ்திரி பேசியதாவது, அவர் (உம்ரான்) இந்தியாவின் அதிவேக பந்துவீச்சாளர்களில் ஒருவர், உலகக் கோப்பையில் என்ன நடந்தது என்பதை நீங்கள் பார்த்தீர்கள், அங்கு ஹரிஸ் ரவுஃப், நசீம் ஷா மற்றும் அன்ரிச் நார்ட்ஜே ஆகியோரின் உண்மையான வேகத்தால் எதிரணி கலக்கமடைந்தது. எனவே, உண்மையான வேகத்திற்கு மாற்று இல்லை. நீங்கள் சிறிய ஸ்கோரை எடுத்தாலும் கூட வேகத்தை வைத்து எதிரணியை சமாளிக்க முடியும்.  எனவே உம்ரானுக்கு இது ஒரு வாய்ப்பு, இந்த வெளிப்பாட்டிலிருந்து அவர் கற்றுக் கொள்வார் என்று நம்புகிறேன்” என கூறினார்.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற இருந்த முதல் டி20 போட்டி இன்று மழையால் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. நாளை மறுநாள் மவுண்ட் மவுங்கானுய் பே ஓவல் ஸ்டேடியத்தில் இரண்டாவது டி20 போட்டி நடைபெறுகிறது.

நியூசிலாந்து டி20 போட்டிகளுக்கான இந்திய அணி :

ஹர்திக் பாண்டியா (கே), ஷுப்மான் கில், இஷான் கிஷன், தீபக் ஹூடா, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் (து.கே மற்றும் வி.கி ), சஞ்சு சாம்சன் (வி.கீ ), வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷல் படேல், முகமது சிராஜ், புவனேஷ்வர் குமார், உம்ரான் மாலிக்.

Categories

Tech |