Categories
லைப் ஸ்டைல்

வேகமாக உடல் எடை குறைய… எளிய டிப்ஸ் இதோ…!!!

உடல் எடையை குறைக்க இதனைத் தொடர்ந்து செய்து வந்தால் ஒரு மாதத்தில் உங்களின் உடல் எடை விரைவாக குறைந்து இருக்கும்.

நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவில் அதிக சத்துக்கள் நிறைந்த உணவை அதிக அளவு எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால் சிலர் அளவுகடந்த உணவுகளை எடுத்துக் கொள்வதால் உடல்பருமன் அதிகரிக்கிறது. உடல் பருமனை குறைக்க சில டிப்ஸ் உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது.

மாதுளைப்பழத்தில் அதிகப்படியான ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்திருக்கிறது. இவை உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதோடு உடலில் உள்ள கெட்ட கொழுப்பினை குறைக்க உதவுகிறது. மேலும் தினமும் காலை மாதுளை பழத்தை தயிருடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால், உடல் எடையில் நல்ல மாற்றம் காணலாம். இது உடலில் உள்ள சில பிரச்சனைகளை போக்கவும் வல்லது. மேலும் மாதுளை உடலிலுள்ள ரத்தத்தை அதிகரிக்கும். கர்ப்பிணிப் பெண்களுக்கு கர்ப்பகாலத்தில் சத்து நிறைந்த பழமாக இது கருதப்படுகிறது.

மேலும் உடல் எடை வேகமாக குறைய விரதம் முக்கியம். அதாவது உடல் மற்றும் செரிமான உறுப்புக்கு ஓய்வு அளிப்பது மிகவும் முக்கியம். ஒரு நாளைக்கு 16 முதல் 18 மணி நேரம் உண்ணாவிரதம் இருக்க வேண்டும். இந்த விரதத்தின் போது தண்ணீர் மட்டும் குடிக்கலாம். இது கொழுப்புகளை கரைத்து, நாம் உணவு உண்ணும் முறையை நமக்கு உணர்த்துகிறது. இந்த விரதம் தொடர்ச்சியாக இல்லாமல் சீராக இருக்க வேண்டும் என்பது கவனிக்கத்தக்கது.

Categories

Tech |