Categories
தேசிய செய்திகள்

வேகமாக சென்ற பேருந்து…. கோர விபத்தில் உயிரிழந்த 5 பேர்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

அரியானா மாநிலம் அம்பாலா-சண்டிகர் தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை டெல்லி நோக்கி தனியார் சொகுசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது மற்ற வாகனங்களை முந்தி செல்ல முயன்றபோது எதிர்பாராதவிதமாக சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த பேருந்து மீது மோதியது. இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 12 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் இரண்டு பேருந்தையும் கிரேன் மூலம் நெடுஞ்சாலையிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டது. இந்த விபத்துக்கு பின்னர் பேருந்தின் ஓட்டுநர் தப்பி ஓடிச் சென்று விட்டார். மேலும் அடையாளம் தெரியாத டிரைவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |