ஆந்திராவை சேர்ந்த இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் சென்ற படி துப்பாக்கியால் சுடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஆந்திர மாநிலம் விஜயவாடா நகரில் உள்ள துர்க்கை அம்மன் கோவில் மேம்பாலத்தில் இளைஞர்கள் இரு சக்கர வாகனத்தில் பல சாகசங்களை செய்து வருகின்றன. இவர்களது இந்த செயலால் தங்களுக்கு இடையூறு ஏற்படுவதாக பொதுமக்கள் பலரும் காவல்துறையினரிடம் புகார் அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் சமீபத்தில் அந்த மேம்பாலத்தில் இருவர் அதிவேகமாக பைக்கில் சென்று கொண்டே பைக் மீது ஏறி நின்று துப்பாக்கியால் வாகனத்தை சுடுவது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீஸார் இருவரையும் தேடி வருகின்றனர்.