ஸ்பெயின் நாட்டின்மலாகா பிராந்தியத்திலும், தென் மேற்கு பிரான்சிலுள்ள காட்டுப் பகுதிகளிலும் இப்போது காட்டுத் தீயானது அதிகமாக பரவி வருகிறது. மரங்கள் பற்றி எரிவதால் விண்ணை முட்டும் அளவுக்கு புகை எழுந்துள்ளது. இதன் காரணமாக மக்கள் பெரும் அச்சத்தில் இருக்கின்றனர். கோடை வெப்பம் குறித்து முன்பே எச்சரிக்கை விடுக்கப்பட்ட சூழ்நிலையில், தீ பரவி வரும் பகுதிகளில் வசித்த மக்கள் தங்களது வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டனர்.
இதன் காரணமாக பெருமளவில் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இதனிடையில் பிரான்ஸ் நாட்டின் ஜிரோண்டே பகுதியிலிருந்து 14,000 நபர்கள் நேற்று வெளியேற்றப்பட்டதாக கூறப்படுகிறது. அங்கு 1,200க்கும் அதிகமான தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவர போராடி வருகின்றனர். 10,000 ஹெக்டேர் பரப்பளவில் பரவி இருக்கும் காட்டுத் தீயால் மரங்கள் முழுவதுமாக அழிந்திருக்கிறது. ஹெலிகாப்டர்கள் வாயிலாக தண்ணீர் ஊற்றப்பட்டு காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் பணிகள் முழு வீச்சில் நடைபெறுகிறது.