மங்கி பாக்ஸ் என அழைக்கப்படும் குரங்கு அம்மை நோய் பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் குரங்கம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 20 நாடுகளில் பரவியுள்ள இந்த குரங்கம்மை காரணமாக 200க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில் மேலும் இரண்டு நாடுகளுக்கும் இந்த குரங்கம்மை பரவியுள்ளது.
மெக்சிகோவில் இருந்து முதன் முறையாக பரவி வந்த இந்த குரங்கம்மை பல நாடுகளில் தொடர்ந்து பரவி வருவதால் மக்கள் அனைவரும் பீதியில் உள்ளன. அதுபோல் அயர்லாந்து நாட்டிலும் குரங்கம்மை இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அந்த நாட்டின் கிழக்குப் பகுதியில் ஒருவருக்கு குரங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனாலும் அவருக்கு ஆஸ்பத்திரியில் சேர்க்கும் அளவுக்கு பாதிப்பு இல்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.