Categories
மாநில செய்திகள்

வேகமாக பரவும் புதிய தொற்று…. மீண்டும் லாக்டவுன்?…. மாவட்டங்களுக்கு பறந்த திடீர் உத்தரவு…!!!!

கொரோனா தொற்று மீண்டும் வேகமாக பரவி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் மீண்டும் புதிய வகை கொரோனா வைரஸ் பரவுவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. அதாவது மும்பையைச் சேர்ந்த ஒருவருக்கு ஓமைக்ரான் வைரஸின் திரிபான XE எனும் புதிய வகை தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் ஓமைக்ரானை விட 200 மடங்கு வேகமாக பரவும் திறன் கொண்டது. இந்நிலையில் சீனாவில் கடந்த 2 வருடங்களாக இல்லாத அளவுக்கு கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அங்கு இருக்கும் ஹாங்காங் தேசிய கண்காட்சியில் 40 ஆயிரம் படுக்கைகளுடன் கூடிய மருத்துவமனை அமைக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியருக்கும் ஒரு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார்.

அதில் தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை ஒரு நாளைக்கு 20 க்கும் அதிகமாக மாறியுள்ளது. திருப்பூர், சேலம், செங்கல்பட்டு, சென்னை போன்ற மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தி கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே முககவசம் அணிதல், கைகளை சுத்தம் செய்தல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்ற நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். மேலும் பொதுமக்கள் கூடும் இடங்கள், கொரோனா தொற்றால் பாதித்தவர்களுடன் தொடர்பில் இருத்தல் போன்றவற்றை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என எழுதி அனுப்பியுள்ளார்.

Categories

Tech |