அரசு பேருந்து மோதிய விபத்தில் வாலிபர் உடல் நசுங்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள நரிக்குடியிலிருந்து காரியாபட்டி நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் சாலையோரம் நடந்து சென்ற பாண்டியராஜ் என்பவர் மீது அரசு பேருந்து பலமாக மோதியது. இந்த விபத்தில் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி பாண்டியராஜ் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாண்டியராஜின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பேருந்து ஓட்டுனரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.