அரசு பேருந்து மோதிய விபத்தில் சக்கரத்தில் சிக்கி மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்தில் உள்ள பெரியார் பேருந்து நிலையத்தில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி நடந்து சென்றுள்ளார். அப்போது திருமங்கலத்தில் இருந்து பேருந்து நிலையத்திற்கு வந்த அரசு பேருந்து மூதாட்டியின் மீது மோதியது. இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்த மூதாட்டி மீது பேருந்தின் சக்கரம் ஏறி இறங்கியதால் உடல் நசுங்கி அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மூதாட்டியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அந்த மூதாட்டி யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.