நெய்வேலி அடுத்த தெற்கு வெள்ளூர் கிராமத்தில் சாலையை கடக்க முயன்ற இரு சக்கர வாகனத்தின் மீது மினி லாரி மோதியதால் பள்ளி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். என்எல்சி சொசைட்டி தொழிலாளி வேல்முருகன் என்பவர் தனது மகளுடன் இருசக்கர வாகனத்தில் சென்று உள்ளார். அப்போது சாலையை கடக்க முயன்ற நிலையில் வேகமாக வந்த மினி லாரி அவர்களின் வாகனம் மீது மோதி கவிழ்ந்தது.
அந்தக் கோர விபத்தில் பலத்த காயமடைந்த மாணவி, சிகிச்சைக்காக கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். வேல்முருகன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து போலீசார் இந்த விபத்து பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.