அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் தந்தை மகன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள சென்னிர்குப்பத்தில் ஆந்திராவை சேர்ந்த முனிசுந்தரம் வசித்து வந்துள்ளார். இவருக்கு 6 வயதுடைய சரிவரதன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் முனிசுந்தரம் தனது மகனுடன் மோட்டார் சைக்கிளில் செங்குன்றம் நோக்கி புறப்பட்டுள்ளார். இவர் மன்சூர்- வண்டலூர் சாலையில் உள்ள மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத வாகனம் முனிசுந்தரத்தின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது.
இதில் படுகாயமடைந்த முனிசுந்தரம் மற்றும் அவரது மகன் சரிவரதன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சோழவரம் காவல்துறையினர் உயிரிழந்த முனிசுந்தரம் மற்றும் சரிவரதன் ஆகிய இருவரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விபத்தை ஏற்படுத்திய அடையாளம் தெரியாத வாகனத்தின் ஓட்டுநரை தீவிரமாக தேடி வருகின்றனர்.