Categories
மாநில செய்திகள்

“வேகமா பரவுது” நாளை முதல் 15 மையங்கள்…. சென்னை மாநகராட்சி போட்ட உத்தரவு…!!!!

சென்னையில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருவதன் காரணமாக பொதுமக்கள் அனைவரும் கட்டாயமாக கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. அதுமட்டுமின்றி மாஸ்க் அணிதல்,, சமூக இடைவெளி, கிருமிநாசினி பயன்படுத்துதல் ஆகியவற்றை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

சென்னையில் உள்ள 39 ஆயிரம் தெருக்களில் 507 தெருக்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே அந்த பகுதிகள் கட்டுப்பட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னையில் கொரோனா பாதித்தவர்களுக்கு முதற்கட்ட உடற்பரிசோதனை செய்ய 11 மையங்கள் இயங்கிவரும் நிலையில், நாளை முதல் 15 மையங்கள் செயல்பட உள்ளன. தினசரி கொரோனா பரிசோதனைகளையும் 25 ஆயிரமாக அதிகப்படுத்த சென்னை மாநகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது.

Categories

Tech |