அமெரிக்காவில் முதியவர் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கனடா ஒன்ராறியோவில் வில்லியம் வில்காக்ஸ்(65) என்பவர் அமெரிக்காவில் வசித்து வருகிறார். இவர் அமெரிக்கா கேஸ் சிட்டி சாலையில் ஏப்ரல் 5ம் தேதி செவ்வாய்க்கிழமை 11 மணியளவில் செமி ட்ராக்டர் வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மரத்தின் மீது மோதி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இது குறித்து காவல்துறையினர் கூறுகையில் வில்லியம் வில்காக்ஸ் டிராக்டரை வேகமாக ஓட்டிச் சென்றுள்ளார் என்றும் சீட் பெல்ட் அணியாதது தான் உயிரிழப்புக்கு காரணம் எனவும் தெரிவித்துள்ளனர். மேலும் சீட்பெல்ட் அணிவதன் அவசியம் குறித்தும் காவல்துறையினர் தெரிவித்தனர்.