Categories
மாநில செய்திகள்

வேகமெடுக்கிறது புரெவி புயல்… மக்களுக்கு கடும் எச்சரிக்கை…!!!

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக மாறுகிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. அது காரைக்காலுக்கு கிழக்கு தென்கிழக்கு 975 கிலோ மீட்டர் தூரத்தில் நிலை கொண்டுள்ளது. அது இன்று காலை புயலாக வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை மாலை இலங்கையை கடந்து குமரி கடல் பகுதியில் நிலை கொள்ளும்.

அதனால் இன்று முதல் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்யும். அடுத்த இரண்டு நாட்களுக்கு தென்காசி, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் ஆகிய இடங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யும்.

மேலும் கடலோர மாவட்டங்களில் மணிக்கு 45 முதல் 55 கிமீ வரையில் காற்று வீசும் என்ற சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |