Categories
உலக செய்திகள்

வேகமெடுக்கும் குரங்கு அம்மை…. 14,000 பேர் பாதிப்பு….. உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!!

உலகம் முழுவதும் 14 ஆயிரம் பேருக்கு குரங்கு அம்மை பாதிக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமில்லாமல் ஆப்பிரிக்காவில் இதுவரை 5 பேர் இறந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ரோல் அதேனோம் கேப்ரியேசஸ் கூறியது, ஆப்பிரிக்க நாடுகளில் பரவத் தொடங்கிய குரங்கு அம்மை நோய் தற்போது ஆஸ்திரேலியா, அமெரிக்கா, பிரிட்டனம் உள்ளிட்ட 70-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்திகளில் பரவி வருகிறது. உலக அளவில் இதுவரை 14,000 பேரு குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆப்பிரிக்காவில் மட்டும் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதனைதொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் நோய் பரவலை கட்டுப்படுத்துவதற்காகவும், உயிர்களை காப்பாற்றுவதற்கு தேவையான அனைத்து உதவியையும் உலக சுகாதார அமைப்பு செய்யும் என்று அவர் உறுதியளித்துள்ளார். இதனையடுத்து நாளை சமீபத்திய தொற்றி தரவை மதிப்பாய்வு செய்ய சர்வதேச சுகாதார ஒழுங்கு முறை அவசர குழு மீண்டும் கூடுகிறது. மேலும் வெடிப்பு சர்வதேச அக்கறையின் பொது சுகாதார அவசர நிலையாக உள்ளதா என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்” என்று அவர் கூறினார்.

Categories

Tech |