நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வந்ததன் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடந்தனர். மேலும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கடுமையாக பின்பற்றப்பட்டன. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த விலையில் ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்டது. மக்கள் தங்களுடைய இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வந்தனர். இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. எனவே கொரோனாவை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது.
அந்த வகையில் வெளிநாடுகளில் இருந்து வெளிமாநிலங்கள் மூலமாக தமிழகம் வருவதற்கு e-பாஸ் கட்டாயம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் தமிழகத்திற்கு வணிக ரீதியாக வருபவர்களுக்கு தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்றும், கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளுக்கு இ-பாஸ் கட்டாயம் என்றும் அறிவித்துள்ளது.