தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது.
இதனையடுத்து மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மீண்டும் ஊரடங்கு அமல் படுத்தப்படும் நிலை உருவாகியுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் சென்னை, கோவை, செங்கல்பட்டு மற்றும் தஞ்சாவூர் ஆகிய 4 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது. இந்தியாவின் முக்கிய நகரங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்த நான்கு மாவட்டங்களிலும் கட்டுப்பாடு விதிக்கப்படலாம். மேலும் குறிப்பாக கடைகளை மதியம் வரை மட்டுமே திறக்க அனுமதி வழங்கப்படும் எனவும் கூறப்படுகிறது.