உலகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இந்நிலையில் கொரோனா சற்று குறைந்து வந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இயல்பு வாழ்க்கைக்கு மக்கள் திரும்பி வந்தனர். இதையடுத்து தற்போது மீண்டும் கொரோனா வேகமெடுக்க தொடங்கியுள்ளது.
இந்நிலையில் பாரிஸ் உள்ளிட்ட 15 முக்கிய நகரங்களுக்கு ஒரு மாதம் ஊரடங்கை பிரான்ஸ் அரசு அறிவித்துள்ளது. பாரிசில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை உருவாகியுள்ள நிலையில் பிரான்ஸ் அரசு அதிரடியாக ஊரடங்கை அறிவித்துள்ளது. மேலும் மக்கள் வெளியே செல்ல பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கிறது.