Categories
கொரோனா

வேகமெடுக்கும் கொரோனா 2ஆம் அலை… மற்ற நாடுகளிடம் உதவி கேட்கும் நிலை… ஏ.ஆர்.ரகுமான் ட்விட்டரில் உருக்கமான பதிவு…!!

கொரோனா தொற்று இந்தியாவில் மோசமடைந்து வரும் நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ட்விட்டரில் இந்தியாவிற்காக பிராத்திப்போம் என பதிவிட்டுள்ளார்.

இந்தியாவில் கொரோனா தொற்றின் 2ஆம் அலை மிக மோசமான நிலையை உருவாக்கியுள்ளது. உலகிலேயே கொரோனா  தொற்று அதிகளவில் பாதிக்கப்பட்ட நாடாக இந்தியா இருக்கிறது. இந்நிலையில் ஆக்சிஜன் பற்றாக்குறை, தடுப்பு மருந்து தட்டுப்பாடு போன்ற பிரச்சினைகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இதனையடுத்து மற்ற நாடுகளிடம் உதவி கேட்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து பல உலக நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு உதவ முன்வந்துள்ளனர். இந்நிலையில் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் தனது ட்விட்டர் பக்கத்தில் “இந்தியாவிற்காக பிரார்த்திப்போம்” என பதிவிட்டுள்ளார். மேலும் பலரும் தனது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |