Categories
மாநில செய்திகள்

வேகமெடுக்கும் கோடநாடு வழக்கு….. “316 பேரிடம் நடத்தப்பட்ட”….. விசாரணை நகல்களை பெற்றது சிபிசிஐடி..!!

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் விசாரணை ஆவண நகல்களை பெற்றுள்ளது சிபிசிஐடி.

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக தனிப்படை போலீசார் நடத்திய மறுபுலன் விசாரணையில் சசிகலா உள்ளிட்ட 316 சாட்சிகளின் விசாரணை வாக்குமூலங்கள் அடங்கிய அறிக்கை உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது அந்த நகல்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து, சிபிசிஐடினர் பெற்று சென்றுள்ளனர்..

தற்போது இந்த வழக்கானது மிகவும் முக்கிய கட்டத்தை எட்டி உள்ளது என்று சொல்லலாம். ஆம், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் இதுவரை 11 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இதுவரை 316 நபர்களிடம் தனிப்படை போலீசார் நடத்திய வாக்குமூலங்கள், கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தனிப்படை ஏ.டி.எஸ்.பி கிருஷ்ணமூர்த்தி மாவட்ட நீதிபதியிடம் நேற்று ஒப்படைத்தார்.

இதில் சசிகலா, எஸ்டேட் மேலாளர் நடராஜன், எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருங்கிய நண்பரும், கூட்டுறவு சங்க மாநில தலைவரான இளங்கோவன், தற்கொலை செய்து கொண்ட தினேஷின் தந்தை போஜன், முன்னாள் ஜெயலலிதா கார் ஓட்டுனர் கனகராஜின் சகோதரர் தனபால், அவரது நண்பர் ரமேஷ் உட்பட 316 நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணை அறிக்கையை நீதிபதியிடம் நேற்று ஒப்படைத்திருந்தார்.

இந்த நிலையில் அந்த நகல்களானது இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து சிபிசிஐடியினர் பெற்றுள்ளனர். எனவே அதிவிரைவில் இந்த வழக்கை சிபிசிஐடியினர் விசாரணை மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |