இந்தியாவில் அடிக்கடி ரயிலில் பயணம் செய்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது இந்திய ரயில்வே தனது பயணிகளின் வசதிக்காக அப்போது பல்வேறு வசதிகளை வழங்கி வருகின்றது. அதன்படி சமீபத்தில் கஜுரா ஹோவில் இருந்து டெல்லிக்கு வந்தே பாரத் ரயிலை இயக்குவதற்கு ரயில்வே துறை அமைச்சர் அறிவித்தார். இந்தியாவின் முக்கியமான 75 நகரங்களை வந்தே பாரத் ரெயளுடன் இணைக்கும் திட்டத்தை மத்திய அரசு தற்போது உருவாக்கியுள்ளது.
அதற்காக சென்னை ஐ சி எப் தொழிற்சாலையில் துரித ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. 75 வந்தே பாரத் ரயில்களின் பெட்டிகள் இங்கு தயாரிக்கப்படுகிறது. அவை விரைவில் ஓட்டத்துக்கு தயாராக உள்ளன.மேலும் இந்த ரயில்களில் பயணிகளுக்கு ஏதுவாக நிறைய வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்த ரயில் மிகவும் சிக்கனமானதாக மாற்றப்பட்டுள்ளது. அதற்கான உயர் மட்ட சோதனை நடைபெற்ற வரும் நிலையில் மத்திய ரயில்வே அமைச்சரின் இந்த அறிவிப்புக்கு பிறகு ரயில் பயணிகள் அனைவருக்கும் சமூக வலைத்தளங்களில் நன்றி தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக இந்த ரயில் நிலையத்தில் உள்ளூர் தயாரிப்புகளை சந்தை படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.