பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் நகரில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.
சீன நாட்டில் ஒமைக்ரான் பரவல் காரணமாக கொரோனா பரவல் வேகம் எடுத்து வருகின்றது. இதனால், மீண்டும் மிகக்கடுமையான கொரோனா கட்டுப்பாடுகளை சீன அரசு அமல்படுத்தியுள்ளது. சீன நாட்டின் தலைநகர் பெய்ஜிங், ஷாங்காய் போன்ற நகரங்களில் விமான போக்குவரத்து, ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த இரு நகரங்களிலும் கடுமையான பொது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் இங்கு பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தியது. மேலும் தொழில்துறைகள்,உற்பத்தி துறைகள் முடங்கின. இந்நிலையில் தற்போது கொரோனா பரவல் குறைந்திருப்பதையடுத்து, ஷாங்காய் மற்றும் பெய்ஜிங் நகரங்களில் ரெயில், விமான போக்குவரத்து தொடங்கியுள்ளது.