உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி உலகின் சக்திவாய்ந்த நாடுகள் எல்லாம் வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டு இருக்கிறது என கூறியுள்ளார்.
ரஷ்ய அதிபர் புதின் நேற்று உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கையை மேற்கொள்ள இருப்பதாக அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால் நேற்று காலை முதல் போர் தொடங்கியுள்ளது. இந்த போரில் உக்ரைனில் உள்ள ராணுவ நிலைகள், விமான தளங்கள், இராணுவக் இடங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மேலும் இரண்டாவது நாளாக ரஷ்ய படைகள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதுபற்றி உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி கூறுகையில் “உலகின் மிகப்பெரிய சக்தி வாய்ந்த நாடான ரஷ்யாவை நேற்று தனியாக எதிர்த்தோம். அதே போல் இரண்டாவது நாளான இன்றும் தனியாக எதிர்த்து வருகிறோம்.
மேலும் உலகின் சக்திவாய்ந்த நாடுகள் எல்லாம் வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டு இருக்கிறது. இதனைத் தொடர்ந்து மேற்கத்திய நாடுகள் எங்களை முற்றிலுமாக கைவிட்டுள்ளது. இதனை நாங்கள் எதிர்பார்த்தோம் என்றாலும் கூட அதிக வேதனையை தருகிறது. இதனையடுத்து உக்ரைன் மீது ரஷ்யா நடத்தும் போருக்கு எதிராகவும் உக்ரைனுக்கு ஆதரவாகவும் ரஷ்யாவில் போராட்டம் நடத்தும் மக்களுக்கு மனமார்ந்த நன்றி” என்றுள்ளார்.