சுவர் இடிந்து விழுந்து வேடிக்கை பார்க்க சென்ற தனியார் நிறுவன ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள சூளைமேடு வீரபாண்டியன் நகர் 1-வது தெருவில் இருக்கும் பழைய வீட்டை பொக்லைன் எந்திரம் மூலம் இடித்துக் கொண்டிருந்தனர். அதனை தனியார் நிறுவன ஊழியரான ஹரிபாபு(43) என்பவர் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார். மேலும் வீட்டிற்குள் தூசி மற்றும் அதிக சத்தம் வருவது தொடர்பாக ஹரிபாபு பேசிக் கொண்டிருந்தபோது திடீரென சுவர் இடிந்து அவர் மீது விழுந்தது.
இதனால் இடைபாடுகளுக்குள் சிக்கிய ஹரிபாபுவை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஹரிபாபு பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குபதிவு செய்த போலீசார் பொக்லைன் எந்திர ஓட்டுநரான மகிழன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.