Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

வேடிக்கை பார்க்க சென்ற மாணவர்…. எருது விடும் விழாவில் நடந்த சம்பவம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

எருது விடும் விழாவை வேடிக்கை பார்த்த மாணவன் காளை முட்டி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சப்படி கிராமத்தில் நேற்று முன்தினம் எருதுவிடும் விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவை பார்ப்பதற்காக பத்தாம் வகுப்பு படிக்கும் திவாகர் என்ற மாணவன் தனது நண்பர்களுடன் சென்றுள்ளான். இந்நிலையில் மைதானத்தில் ஆக்ரோஷமாக சுற்றி வந்த காளை பார்வையாளர்களின் கூட்டத்திற்குள் பாய்ந்து வேடிக்கை பார்த்து கொண்டிருந்த திவாகரை முட்டி தள்ளியது.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தவர்கள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே சிறுவன் பரிதாபமாக இறந்துவிட்டான். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |