Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வேடிக்கை பார்த்த சிறுவன்…. நொடியில் பறிபோன உயிர்…. 8 மணி நேர போராட்டம்…!!!

தண்ணீரில் மூழ்கி சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள நல்லாம்பிள்ளை கிராமத்தில் பழனிசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரமோத்(14) என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் சிங்காரப்பேட்டையில் இருக்கும் அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளான். நேற்று விடுமுறை தினம் என்பதால் பிரமோத் தனது நண்பர்களுடன் அப்பகுதியில் இருக்கும் தோட்டத்திற்கு சென்றுள்ளான். இதனையடுத்து அங்குள்ள 80 அடி ஆழ கிணற்றில் நண்பர்கள் குளித்து கொண்டிருந்த போது நீச்சல் தெரியாத பிரமோத் கிணற்றின் பக்கவாட்டில் அமர்ந்தபடி குளிப்பதை வேடிக்கை பார்த்துள்ளார்.

அப்போது எதிர்பாராதவிதமாக கால் தவறி கிணற்றில் விழுந்த பிரமோத் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தான். இதனால் நண்பர்கள் உடனடியாக அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடம் நடந்தவற்றை தெரிவித்தனர். இதுகுறித்து அறிந்த தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று மின் மோட்டார் மூலம் கிணற்றில் இருக்கும் தண்ணீரை வெளியேற்றி 8 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு சிறுவனின் உடலை மீட்டனர். பின்னர் சிறுவனின் உடல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |