Categories
தேசிய செய்திகள்

வேட்டைக்கு சென்ற இளைஞரை கொன்று புதைத்த நண்பர்கள்….. காட்டுக்குள் நடந்தது என்ன?…. பயங்கர சம்பவம்…..!!!

கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் பைசன்வாலி என்ற பகுதியில் மகேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பழங்குடியினத்தை சேர்ந்தவர். இவர் தனது நண்பர்களுடன் கடந்த 27ஆம் தேதி காட்டுப்பகுதிக்கு வேட்டையாடுவதற்காக சென்றுள்ளார் . அதன் பிறகு நண்பர்கள் வீடு திரும்பினர். ஆனால் மகேந்திரன் வீடு திரும்பவில்லை. மகேந்திரன் வழிமாறி சென்றிருக்கலாம் என்று நண்பர்கள் கூறியதையடுத்து பழங்குடியின மக்கள் காட்டுக்குள் தேடி வந்தனர்.

இது குறித்து ராஜக்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது சந்தேகத்தின் பேரில் மகேந்திரனின் நண்பர்கள் இருவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டார். அப்போது அவர்கள் கூறியது, வேட்டையாடுவதற்காக கையில் இருந்த நாட்டு துப்பாக்கியால் சுட்டபோது தவறுதலாக மகேந்திரன் உடலில் பட்டதால் அவர் பலியானதாகவும், வெளியே தெரிந்தால் பிரச்சினை வரும் என்பதால் வனப்பகுதியில் குழிதோண்டி மகேந்திரனை புதைத்தாக அவர்கள் கூறினர். இதனைய்டுத்து இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Categories

Tech |