உடும்புகளை வேட்டையாடிய குற்றத்திற்காக 2 பேரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பெரியநாயக்கன்பாளையம் வன சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் வனத்துறையினரை பார்த்ததும் தப்பி ஓட முயற்சித்த இரண்டு பேரை அவர்கள் மடக்கி பிடித்து விசாரித்துள்ளனர்.
அந்த விசாரணையில் அவர்கள் காளம்பாளையம் பகுதியில் வசிக்கும் மணி மற்றும் ராஜேந்திரன் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர்கள் 3 உடும்புகளை வேட்டையாடியதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின்படி இரண்டு பேரையும் வனத் துறையினர் கைது செய்துள்ளனர்.