Categories
தேனி மாவட்ட செய்திகள்

வேட்டையாடியதன் நினைவாக…. வரையப்பட்ட ஓவியங்கள்…. கண்டறிந்த தொல்பொருள் பேராசிரியர்கள்….!!

5000 ஆண்டுகளுக்கு முந்தைய ஓவியங்களை தொல்பொருள் ஆராய்ச்சி பேராசிரியர்கள் கண்டறிந்துள்ளனர்.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அடுத்துள்ள வண்டியூர் பகுதியில் கிருஷ்ணன் கோவில் மலை ஒன்று உள்ளது. இந்நிலையில் போடி ஏலக்காய் விவசாயிகள் சங்க கல்லூரியின் தொல்பொருள் ஆராய்ச்சி பேராசிரியர் மாணிக்கராஜ், திண்டுக்கல் மாவட்டம் நெல்லூர் கள்ளர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் கருப்பையா ஆகியோர் தலைமையில் பேராசிரியர்கள் அந்த மலை பகுதியில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அப்போது மலையின் பாறைகள் மீது பழங்கால ஓவியங்கள் வரையப்பட்டுள்ளதை கண்டுபிடித்துள்ளனர்.

இதுகுறித்து நடத்திய ஆய்வில், இந்த ஓவியங்கள் சுமார் 5000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அந்த பாறையில் வெள்ளை நிறத்தில் வேட்டைக்கு சென்ற வீரர்கள் தனது இரண்டு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்தி வணங்கி நிற்பது போன்ற ஓவியங்கள் அதிகம் இருந்த நிலையில் கருப்பு வண்ண ஓவியங்கள் அழிந்த நிலையில் காணப்பட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் தொன்மையான வேட்டை சமூகத்தை சேர்ந்த மக்கள் விலங்குகளை வேட்டையாடுவதற்க்கு வந்ததன் நினைவாக இத்தகைய ஓவியங்களை வரைந்து இருக்கலாம் என தொல்பொருள் பேராசிரியர் மாணிக்கராஜ் கூறியுள்ளார்.

Categories

Tech |