நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 2006ம் வருடம் திரைக்கு வந்த படம் “வேட்டையாடு விளையாடு” ஆகும். இப்படத்தில் கதாநாயகியாக ஜோதிகா நடித்திருந்தார். அத்துடன் கமாலினி, பிரகாஷ்ராஜ், டேனியல் பாலாஜி போன்றோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருந்தனர். கவுதம் மேனன் இயக்கி இருந்த இந்த படம் ரசிகர்கள் இடையில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து சில மாதங்களுக்கு முன்பு இந்த படத்தின் 2ஆம் பாகம் பற்றிய தகவல் வெளியாகியது. அதன்பின் எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை.
இந்த நிலையில் மீண்டும் வேட்டையாடு விளையாடு -2 திரைப்படம் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இந்த படத்தின் 2ஆம் பாகத்திற்கான முழு கதையையும் இயக்குனர் கவுதம் மேனன் எழுதியுள்ளதாகவும், விரைவில் கமலை சந்தித்து பேச இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தின் கதைக்கு கமல் ஓகே சொல்லிவிட்டால் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் வெளியீட்டுக்கு பின் வேட்டையாடுவிளையாடு-2 பணியை கவுதம் மேனன் தொடங்க திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.