Categories
தேசிய செய்திகள்

வேட்பாளருடன் 5 பேர் மட்டுமே செல்ல வேண்டும்… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

தேர்தலில் வாக்கு சேகரிக்க வீடு வீடாகச் சென்று பிரசாரம் செய்ய ஐந்து நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் தமிழகம் உட்பட ஐந்து மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதற்காக அனைத்து கட்சிகளும் கடந்த இரண்டு மாதங்களாக அனைத்து பகுதிகளிலும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதனால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள்.

இதற்கு மத்தியில் கூட்டணி குறித்த குழப்பம் நிலவி வருகிறது. அதுமட்டுமன்றி தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அதிமுக அரசு பல்வேறு நலத்திட்டங்களை மக்களுக்கு அறிவித்து வருகிறது. இதனை அடுத்து தமிழகத்தில் தேர்தல் குறித்த அறிவிப்பு இன்று மாலை 4.30 மணி அளவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை டெல்லி தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவிப்பார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி தேர்தல் குறித்த முக்கிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டு வருகிறார். தமிழகத்தில் மொத்தம் 88,936 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளது. வாக்குப்பதிவு நேரம் மேலும் ஒரு மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 80 வயதுக்கு மேற்பட்டோர் தபால் வாக்கு முறையை பயன்படுத்தலாம். வீடு வீடாக சென்று பிரசாரம் செய்ய ஐந்து நபர்களுக்கு மட்டுமே அனுமதி. பதட்டமான வாக்குப் பதிவு மையங்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா தெரிவித்துள்ளார்.

Categories

Tech |