தமிழக அரசானது மக்களின் நலன் கருதி ஆவின் பாலின் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் குறைத்தது. இதன் காரணமாக பாலின் விற்பனையானது வெகுவிரைவில் அதிகமாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து 450 நிறுவனங்கள் மற்றும் ஒரு கோடி நுகர்வோர்கள் இத்திட்டத்தால் பயன் அடைந்துள்ளனர். மேலும் ஆவின் உடன் 6 லட்சம் நுகர்வோர்கள் புதியதாக இணைந்துள்ளதால் ஆவினின் சந்தை மதிப்பு அதிகமாகி உள்ளது. இதனை அடுத்து முதல்வர் ஸ்டாலின் கூறியிருப்பதாவது, “தகுந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு ஆவின் பால் பொருட்களின் விற்பனை அதிகரித்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும்.
இதன் அடிப்படையில், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் , மாவட்ட தொழிற்சங்கங்கள் (ஆவின்) மற்றும் பால் துறையின் செயல்பாடுகளை துரிதப்படுத்த நிர்வாக காரணங்களுக்காக பணியிட மாற்றங்களுக்கான உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. இந்த சூழலில், இடைத்தரகர்களை நம்பி பால் பரிமாற்றத் துறையில் புதிய பணியிட மாற்றம் மற்றும் வேலைவாய்ப்புகளில் ஏமாற வேண்டாம் என்று பால் வளத்துறை அமைச்சர் நாசர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் பண மோசடியில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.