போலீஸ் என்று தெரியாமல் குடிபோதையில் வாலிபர்கள் கலாய்த்ததால் காவல்துறையினரிடம் மாட்டிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் போக்குவரத்து சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றுபவர் ராமலிங்கம். இவர் மாம்பலம் குடியிருப்பு பகுதியில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று ராமலிங்கம் கடையில் மருந்து வாங்கி விட்டு தி.நகர் பேருந்து நிலையம் வழியாக நடந்து சென்றுள்ளார். அப்போது குடிபோதையில் அவ்வழியாக வந்த வாலிபர்கள் ராமலிங்க மீது மோதி உள்ளனர். எனவே ராமலிங்கம் அவர்களைப் பார்த்து செல்லுமாறு கூறியுள்ளார். அதற்கு அவர்கள் “வேணும்னு தான் உன்ன இடிச்சோம். அதுக்கு இப்ப நீ என்ன பண்ண போறே” என்று திமிராக கூறியுள்ளனர்.
ஆனால் இதற்கு ராமலிங்கம் எதுவும் கூறாமல் அமைதியாக இருந்ததால் உற்சாகம் அடைந்த அந்த வாலிபர்கள் உங்கள் ஜி பே நம்பருக்கு 500 ரூபாயை என் நண்பர் அனுப்பியுள்ளார். அதை இப்போது எங்களுக்கு எடுத்துக்கொள்ளுங்கள் என்று கேட்டுள்ளனர்.
இதனால் பொறுமை இழந்த ராமலிங்கம் வாலிபர்களுக்கு தெரியாமல் மாம்பலம் காவல் நிலையத்திற்கு போன் செய்து காவல்துறையினரை வரவழைத்துள்ளார். இந்நிலையில் காவல்துறையினரை கண்டதும் அந்த குடிகார வாலிபர்கள் அங்கிருந்து தப்பிக்க பார்த்துள்ளனர். ஆனால் காவல்துறையினர் அவர்களை சுற்றி வளைத்து பிடித்து காவல் நிலையத்துக்கு கொண்டு செறுள்ளனர். விசாரணையில் அவர் சென்னையை சேர்ந்த பிரதீப் குமார் மற்றும் நந்தகுமார் என்பது தெரியவந்துள்ளது.
ஆனால் காவல்துறையினர் அவர்கள் மீது வழக்கு பதியாமல் எச்சரிக்கை விடுத்து அனுப்பியுள்ளனர். வடிவேலு காமெடி போல நிஜ வாழ்க்கையிலும் கலாய்த்து காவல்துறையினரிடம் சிக்கிக் கொண்ட சம்பவம் அந்த பகுதியில் நகைச்சுவை கலந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.